வியாழன், 6 செப்டம்பர், 2012

புலம்பல்கள் - 06/09/2012 பெண்கள் வா....ரம்.

சஹானாஸ்

 

தமிழ்நாட்டில் உச்சரிக்கப்படும் ஒரு கிளு கிளு உச்சாடனமாக மாறியிருக்கிறது சஹானாஸ் என்ற பெயர். 50 திருமணங்களுக்கு மேல் செய்ததாக நாளேடுகளால் தீனியாக்கப்பட்ட சஹானாஸ், தான் வெறும் நான்கு திருமணங்கள் மட்டுமே செய்ததாக புலம்பியிருக்கிறார். பாரதத்து கதாநாயகியை விட குறைவாக திருமணம் செய்த தன்னை வில்லியாக இந்த சமூகம் நோக்குவதை எண்ணி வேதனைப்படுவது அவர் முகத்திலேயே தெரிகிறது.பல நாட்களாக வலை வீசி, ஒருவழியாக பெங்களுரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் பிடித்திருக்கிறது போலிஸ். ஆக வலை வீசி தானியம் போட்ட வகையில் அரசுக்கு இரண்டு கோடி இழப்பு என்று கணக்கு காட்டாத போலிஸுக்கு நன்றி. இதற்க்கு முன் எந்த குற்றப் பின்னனியும் இல்லாத, புகைப்படம் முதல் அனைத்து தகவல்களும் கிடைக்கப் பெற்ற ஒரு தனி மனிதரை பிடிக்க காவல்துறைக்கு இத்தனை காலம் ஆகும் போது, திட்டமிட்டு கொலை, கொள்ளை செய்யும் கும்பல்கள் உடனடியாக பிடிபடும் மர்மம்தான் புரியவில்லை என் சிறுமூளைக்கு (கணக்கு காட்டத்தானோ என்னவோ..?).

நாயகன் படத்தில் வரும், “அவனை நிறுத்த சொல், நான் நிறுத்துறேன்...” என்ற வசனம் போல், என்னை மட்டும் பிடிக்கிறீங்க, என்ன இப்படி மாத்தினவனையும் பிடிங்க என்று போலிஸையே குழப்பிக் கொண்டிருக்கிறார் சஹானாஸ். நான் செய்த ஒரே தப்பு ஒருத்தனை டைவர்ஸ் பண்ணாம அடுத்தவனை கல்யாணம் செய்ததுதான் மற்றபடி நான் நிரபராதி என்கிறார். என் சார்பாக (பதிவுலக சார்பாகன்னு போட்டா, இருக்குற சூடுல எல்லாரும் கும்மி எடுத்துவாங்க) இந்த வழக்கின் நீதிபதிக்கு ஒரு வேண்டுகோள், ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனா இந்த ஒரு நிரபராதிக்கு தயவு செய்து தண்டனை கொடுத்து ஆண்வர்கத்தை காப்பாற்றுங்கள்.


முத்துச் செல்வி

 தொகுதி மக்களுக்கு பிரச்சினைன்னா எம்.எல்.ஏ கிட்ட மனு கொடுக்கலாம்...
அந்த எம்.எல்.ஏ க்கே பிரச்சினைன்னா... யாருகிட்ட மனு கொடுக்குறது?


அம்மாவிடம் (மேல்மருவத்தூர் அம்மா இல்லீங்க, அ.தி.மு.க. கடவுள் ) மனு கொடுத்திருக்கார் முத்து மாரியப்பன், யாருப்பா இவரு? எம்.எல்.ஏ கணவருதாங்க. அட என்னதான்யா உங்க பிரச்சனை ?, ஒன்னுமில்லப்பா அய்யாவோட கஸ்டடியில இருந்த எம்.எல்.ஏ முத்துச்செல்விய, செல்வி ஜெயலலிதா பேரவைல ஏதோ போஸ்டிங்ல இருக்கிற அப்துல் கனி அவரு கஸ்டடியில எடுத்துட்டாராம். ஏன்னா...?, அட பேர்ல செல்வி இருந்ததால நம்ம பேரவை சொத்து நினைச்சுருப்பாரு. அப்புறம் பஞ்சாயத்து போயஸ் கார்டன் போய், அம்மா தலையில அடிச்சிக்காத குறையா, தீர்ப்பு சொல்லி அனுப்புச்சாங்கலாம். தீர்ப்பு என்னாவா..?, வழக்கம் போல கட்சி பொறுப்பில் இருந்து கல்தாதான். என்னா அசிங்கமா..? அட அரசியல்னாலே அசிங்கம் தானேப்பா. ஆணுக்கு பெண் சரிநிகர் தானே. ஏற்கனவே சட்டசபையில சேலை கிழிஞ்சாச்சு, இனி வேட்டி கிழியறது மட்டும் தானே பாக்கி. மேடம் மக்கள் உங்க கிட்ட இன்னும் நிறைய எதிர்பாக்குறாங்க.


நீலிமா

வழக்கமா ஐ.டி நியூஸ்-ன்னாலே, ஏதோ கெயிட்டி சினிமாஸ் மாதிரி பத்திரிக்கைகள் எல்லாம் கிளு கிளுன்னு எழுதித்தள்ளும், இந்த முறை நியூஸை வாரி கொடுத்துருக்கிறார் நீலிமா...


இன்ஃபோஸிஸ் மாடியில் இருந்து விழுந்து மர்மமாக இறந்து கிடந்த நீலிமாவின் மறுபக்கம் போலிஸால் கண்டறியப்பட்டது. பெங்களுரில் ஒரு வாழ்க்கையும், அமெரிக்காவில் ஒரு வாழ்க்கையும் வாழ்ந்திருக்கிறார் இரண்டு குழந்தைகளுக்கு தாயான நீலிமா. பெண்ணுரிமை காவலர்கள், ஆண்வர்கத்தின் பணம் மீதான குறிதான் பெண்களை தடுமாற வைக்கிறது என்கிறார்கள். ஆனால் ஆண்களோ, ஹோட்டலுக்கோ, சினிமாவுக்கோ அல்லது செல்போன் டாப் அப்-க்கோ நாங்கள் தான் செலவு செய்கிறோம், இதை மீறி நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கேட்கிறார்கள். நியாயம் தானே, இவர்கள் மேக்கப்-கே மாதம் நாலாயிரம் செலவு செய்யும் நிலையில் ஆண்களை குற்றம் சொல்வது சரியா?அன்புடன் முத்துக் குமரன்.
நன்றி : பட உதவி - கூகுள்

1 கருத்து:

  1. நல்ல பதிவு தொடருங்கள்....
    உங்களுடைய பதிவு அதிக வாசகரை சென்றடைய நன்பனின் பதிவில் உங்களுடைய பதிவின் சுருக்கத்தை வெளியிடலாமே....

    தொடர்புக்கு
    http://nanpaninpathivu.blogspot.com/2012/09/blog-post.html

    பதிலளிநீக்கு

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்