புதன், 22 ஆகஸ்ட், 2012

உதவி தேவை...? !!!

நான் முகநூலில் ( face book ) மேய்ந்து கொண்டிருந்த பொழுது என் நன்பர் பகிர்ந்த ( share ) உதவி தேவை என்ற செய்தி படம் என் கண்ணில் பட்டது.


அதில் ஒரு மருத்துவமனையில் உள்ள குழந்தையின் படம் மற்றும் ஏன் என்ற காரணம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் இதனை பகிரும் பொழுது முகநூலில் உள்ள நிறுவனங்கள் அந்த குழந்தையின் மருத்துவ செலவுக்காக ஒரு குறிப்பிட்ட அளவு பணம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நானும் பல முறை இது போன்ற செய்திகளை பகிர்ந்திருக்கிறேன். காரணம் நம்மால் பண உதவி ஏதும் செய்ய முடியாவிட்டாலும், ஒரு கிளிக் -ல் அந்த குழந்தைக்கு கிடைக்க இருக்கும் உதவியை ஏன் நிராகரிக்க வேண்டும் என்ற எண்ணம்தான். முகநூலில் உள்ள பெரும்பாலானவர்கள் அதனால்தான் இது போன்ற விளம்பரங்களை தன் நன்பர்களுக்கு பகிர்கிறார்கள்.
 

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

சென்னையில் சாவுக்கூத்து

 சமீபத்தில் ஒரு ஊர்வலத்தை காண நேரிட்டது. இது விழா காலமாதலால் ஏதோ சாமி ஊர்வலம் என்று நினைத்த எனக்கு அருகில் வரும்போதுதான் அது பிண ஊர்வலம் என்று தெரிந்தது, சென்னையை பொறுத்தவரையில் சாமி ஊர்வலமாக இருந்தாலும் சாவு ஊர்வலமாக இருந்தாலும் தாரை தப்பட்டைதான் இசை. எங்கள் ஊரில், நான் கண்டவரை சாமி ஊர்வலத்திற்க்கு மேள தாளம், நாதஸ்வரம் மட்டுமே பயன் படுத்த பட்டது (இப்போது எப்படி என்று தெரியவில்லை).

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

ஜோதிடம் ஒரு பார்வை


எனக்கு எப்படி இப்படி ஒரு போதை தலைக்கேறியது என்று தெரியவில்லை...! இது ஒவ்வொருவருக்கும் மரபு வழியாக ஏற்றப்படுவதாக உணர்கிறேன். படித்து வேலைக்கு வரும் வரை இந்த போதை என்னை தீண்டியதில்லை. ஆனால் ஒரு இனிய காலை பொழுதில் என் திருமண பேச்சை அப்பா ஆரம்பிக்கும் போதுதான் முதன் முறையாக அதை உணர்ந்தேன். ஆம் அன்றுதான் அப்பா சில ஜாதகங்களை எடுத்துக்கொண்டு ஜோதிடர்களை

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

புலம்பல்கள் - 16/08/2012

அவலம்

டெல்லியில், பள்ளி பேருந்து ஜன்னலில் எட்டிப்பார்த்ததால், தந்தி கம்பத்தில் தலை மோதி மாணவன் உயிரிழந்தான். இனி பள்ளி பேருந்து ஜன்னல்களுக்கு வலை அமைக்க அரசு உத்தரவிடலாம். அதுவும் சில நாட்களுக்கு கடைபிடிக்கப்படலாம். பின்பு அடுத்த விபத்து நேரும்வரை எவரும் அதை பற்றி கவலைப்படப் போவதில்லை. அரசு உத்தரவிடுவதோடு சரி மீண்டும் நடக்காமல் இருக்க எந்த உத்தரவாதமும் இல்லை, அது எந்த மாநிலமாக இருந்தாலும். அதிகாரிகளுக்கும் எவ்வித அக்கரையும் இல்லை ஏனென்றால் அவர்களை யாரும் தண்டித்ததாக வரலாறு புவியியல் இல்லை. நமக்கும் எதிர்த்துக் கேட்கும் துணிவு இல்லை.

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

கானக்குயில்கள் - 2 : நான்சி அஜ்ரம்

கானக்குயில்கள் பகுதியை துவங்க முடிவுசெய்தவுடன் முதலில் எனக்கு நினைவில் வந்தது அரபு தேசத்து கானக்குயில் நான்சி அஜ்ரம். நான்சி அஜ்ரம் எனக்கு அறிமுகமானது 2004 ஆம் ஆண்டு. ஒரு நாள் வழக்கம் போல் வெட்டியாய் வலையை மேய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் பட்ட கான சரஸ்வதி. அன்று அருகில் இருந்த அனைவரையும் அழைத்து காட்டி ஒரே நாளில் பேக்கு என்று பெயரெடுத்தவன் நான். அவளோ உருது-ல பாடுறா, எல்லாம் புரிஞ்ச மாதிரி, எல்லாரையும் கூப்பிட்டு காட்டுற... என் நன்பன் கேட்டான். ம்...ஹூம்.. கழுதைக்கு தெரியுமா கற்பூர நறுமணம்.

கானக்குயில்கள் -1







எதையவது எழுத வேண்டும் என்று 2009 ஆம் ஆண்டு ஆரம்பித்த வலைத்தளம் இது. ஆனால் கடந்த நான்கு வருடங்களாக எதை எழுதுவது என்று தெரியாமல் அப்படியே வைத்திருந்து ஒரு வழியாக மூன்று நாட்களாக எதையோ கிறுக்கியாயிற்று. மீண்டும் பழையபடி சரக்கு எதுவும் இல்லாததால் எதை எழுதுவது என்று தலையை பிய்த்துக் கொண்டு படுத்ததில் இசையை பற்றி எழுத, கனவில் வந்த தேவதை சொன்னது. எனக்குத்தான் இசையை பற்றி எதுவும் தெரியாதே என்றேன். கவலைப் படாதே இசைக்கு மொழி கிடையாது என்றது. இருந்தாலும் கவலையில்லை எனக்குத்தான் தமிழ் தவிர எதுவும் தெரியாதே என்றேன். அதிகமா பேசுற நீ... அதிகமா பேசுற நீ... என்றபடி பறந்தது. ஃபிகரை பறி கொடுத்த வேதனையில் எழுந்த எனக்கு, சட்டென தோன்றியது ஐடியா ! பேசாம உலக இசை குயில்களை பற்றி எழுதினால் என்ன? முடிவெடுத்து விட்டேன்! விரைவில் வருகிறேன்- குயில்களோடு . 

 


அன்புடன்
முத்துக் குமரன்.

நன்றி
பட உதவி : கூகுள்

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

இயற்கையை இழந்து நின்றோம்

வயல்கள் ப்ளாட்டாக மாறி வருகுது.
உலகின் வெப்பமோ ஏறி வருகுது.

சிறுவயதில் ஏறி விளையாடிய மரங்கள் இன்று இல்லை.
மரங்களில் குதித்து ஓடிய அணில்கள் இன்று இல்லை.

சனி, 11 ஆகஸ்ட், 2012

பெண்ணென்றால் கருணை

வாழ்வின் இருள் படர்ந்த நாட்கள் - அடுத்து என்ன செய்வது என்று தெரியாத பொழுதுகள். பலத்த சிந்தனையுடன் கடற்கரை மணலில் நான். சற்று இடைவெளியில் இளம் காதலர்கள்.

அவள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தான், பேசி முடிந்து நடக்க எழுந்தான்.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

ஆடி கொண்டாட்டம்

ஆடி மாதம் - விவசாயிகளின் பொன்னான மாதம். கிராமங்கள்தோரும் ஆடிப்பட்டத்தை தேடி விதைத்துவிட்டு, ஏக்கத்துடன் வானம் பார்த்து கண்ணீர் மழை விட்டு, மழையை எதிர்ப்பார்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு, வருண பகவான் மனமிரங்கி சிறிது சிறிதாக கருனை மழையை கா(கொ)ட்ட துவங்கிருக்கிறார். அதனால் விவசாயிகளுக்கு கொண்டாட்டம்.