வியாழன், 20 செப்டம்பர், 2012

பிறந்த நாள் ஞாபகம்

கற்பகம் என்ஜினியரிங் ஒர்க்ஸ் முழுதும் இரும்பு அடிக்கும் ஓசையும், வெல்டிங் செய்யும் இரைச்சலுமாய் காதை கிழித்துக் கொண்டு இருந்தது.
டிரிங்...டிரிங்... தொலை பேசி அழைப்பு மணி ஒலித்தது.

தொலைப்பேசியை எடுத்த சூப்பர்வைசர் தியாகு, அறிவு உனக்கு போன்... என கடுப்புடன் கத்தினார். யாராக இருக்கும் என்று யோசித்து கொண்டே வந்து போனை வாங்கி ஹலோ... யார் வேணுங்க..? என்றான்.

புதன், 19 செப்டம்பர், 2012

புலம்பல்கள் - 19/09/2012

 

விலைவாசி.


இன்று முழு முதற்கடவுள் விநாயகனுக்கு பொறந்த நாள், மனிதர்களை போல் கேக் வைத்து கொண்டாட கூடாது என்ற வீட்டம்மாவின் அன்புக் கட்டளை காரணமாக, பிள்ளையாருக்கு பிடித்தமான அயிட்டங்கள் வாங்க கடைக்கு சென்றேன். ஒவ்வொரு பொருட்களின் விலையையும் கேட்ட பின், நம்மை போன்ற மிடில் கிளாஸ் மாதவன்களுக்கு பிறந்த நாள் கொண்டாடங்கள் தேவையா என்ற எண்ணம் வந்தது. ஆனாலும் கடைகளில் கூட்டம் அலை

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

மனசுக்கு பிடிச்ச வேலை

 ஆறு வருடங்களுக்கு பிறகு ஒரு இனிய மாலை பொழுதில் நான் பிறந்து வளர்ந்த ஊர் வந்து இறங்கியாச்சு. திருச்சிதானா இது... பெரிய பெரிய கட்டிடங்கள்..., புதிது புதிதான போக்குவரத்து சிக்னல்கள்..., நிறைய ஒரு

புதன், 12 செப்டம்பர், 2012

ஒரு லட்சம் முதலீடு

மாறனுக்கு ஒன்றும் புரியவில்லை. மூன்று லட்சத்திற்க்கு எங்கே போவது...? வியாபாரத்தை  இழுத்து மூடியாயிற்று, மிச்சம் மீதியாக கையில் உள்ளது ஒரு லட்சம் மட்டுமே. குடும்ப பாரம் சுமக்க இயலாதவாறு அழுத்துகிறது. அரசு வேலைக்காக முற்ச்சித்தால் மூன்று லட்சம் கையூட்டாக கேட்கிறார்கள்...

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

கூடங்குளம் - மக்களாட்சியின் வெற்றி

மீண்டும் பரபரப்பாக மாறியிருக்கிறது கூடங்குளம். கடந்த வாரம் கூடங்குளம் மக்கள் தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இதை தொடர்ந்து மீண்டும் மக்கள் போராட்டம் ஆரம்பமானது. இம்முறை மக்களுடன் பல்வேறு மீனவ அமைப்புகளும் இணைந்து ஆரம்பித்த போராட்டம் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று ஒரு உரிழப்புடன் ஓய்ந்திருக்கிறது.

சனி, 8 செப்டம்பர், 2012

ஜட்ஜஸ் ஒரு பார்வை - II

எந்த ஒரு பதவிக்கும், இந்தளவு படிப்பு இத்தனை வருட அனுபவம் என்ற அளவுகோல் உண்டு, அது போல் இந்த போட்டியின் ஜட்ஜஸாக வர என்ன அளவுகோல்? - ”பணம்” தான். ஆம் ஒரு சேனலால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அது தான் அந்தந்த சேனலுக்கான நடுவர்களின் அளவுகோல்.

ஜட்ஜஸ் ஒரு பார்வை - I

எனக்கு ஓரளவு விபரம் தெரிய ஆரம்பித்த காலத்தில்தான் டி.வி. என்ற ஒரு வஸ்து எங்கள் ஊரில் அறிமுகமானது. இந்திரகாந்தி இறந்த பொழுது எங்கள் தெருவில் ஒரே ஒரு வீட்டில் மட்டுமே டி.வி இருந்தது. அதுவும் கருப்பு வெள்ளை. அந்த வீட்டில் இருந்தவர் முற்றத்தில் டி.வி வைத்து பிரதமரின் உடல் தகனத்தை அனைவரும் காண செய்தார். காலம் உருண்டோட ஒவ்வொரு வீடுகளிலும் டி.வி. முளைக்க தொடங்கியது.

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

குழந்தைகளுக்கு எமனாகும் ஆசிரியர்கள்

சிறுவயதில் நான் அதிகம் சேட்டை செய்வதுண்டு, வாரம் ஒருமுறையாவது என் பள்ளிக்கு என் அப்பா வந்து செல்வார். ஒருமுறை என் நண்பன் மீதிருந்த கோபத்தில் காம்பஸ் எடுத்து, அவன் சைக்கிள் டயரை பல முறை குத்திவிட்டேன். ஆனால் அடுத்த நாள்தான் தெரிந்தது நான் பஞ்சர் செய்த டயர்

வியாழன், 6 செப்டம்பர், 2012

புலம்பல்கள் - 06/09/2012 பெண்கள் வா....ரம்.

சஹானாஸ்

 

தமிழ்நாட்டில் உச்சரிக்கப்படும் ஒரு கிளு கிளு உச்சாடனமாக மாறியிருக்கிறது சஹானாஸ் என்ற பெயர். 50 திருமணங்களுக்கு மேல் செய்ததாக நாளேடுகளால் தீனியாக்கப்பட்ட சஹானாஸ், தான் வெறும் நான்கு திருமணங்கள் மட்டுமே செய்ததாக புலம்பியிருக்கிறார். பாரதத்து கதாநாயகியை விட குறைவாக திருமணம் செய்த தன்னை வில்லியாக இந்த சமூகம் நோக்குவதை எண்ணி வேதனைப்படுவது அவர் முகத்திலேயே தெரிகிறது.

புதன், 5 செப்டம்பர், 2012

சிங்களர்கள் விரட்டியடிப்பு - ஈழம் கிடைத்தது...?

வேளாங்கண்ணி வந்திருந்த சிங்கள பயணிகள் விரட்டியடிப்பு என்பது தமிழக நாளேடுகளின் சூடான செய்தி. முதல் பக்க செய்தியாக ஏறத்தாழ அனைத்து தமிழ் ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. மக்களின் இந்த ஒற்றுமை கண்டு