புதன், 17 அக்டோபர், 2012

புலம்பல்கள் 17/10/2012

ராமர் பாலம்.

 

சேது சமுத்திர திட்டத்திற்க்கு எதிராக சுப்ரமணிய சுவாமி தொடர்ந்திருந்த வழக்கில், இத்திட்டத்தை கைவிடுமாறும், ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்கும் படியும், தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

வெள்ளி, 12 அக்டோபர், 2012

கௌரவம்

ஊருக்கு நடுவே அமைந்திருந்த ஆலமர கோர்ட் கூட்டிப்பெருக்கி ஜமுக்காளம் விரித்து மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீட்டுக்கு வீடு நாற்காலி, பெஞ்ச்செல்லாம் சேகரித்து முக்கியஸ்தர்கள் உக்கார போடப்பட்டிருந்தது. மிராசு வருகையை எதிர்பார்த்து கூட்டம் ஒருபுறமாக நின்று கொண்டிருந்தது.


செவ்வாய், 9 அக்டோபர், 2012

பாவ மன்னிப்பு

நகரத்தின் மத்தியில் அமைந்திருக்கும் லிட்டில் ஃப்ளவர் பள்ளி திங்கள் கிழமைக்கான பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது. பணக்கார பிள்ளைகள் கார்களிலும், நடுத்தரவர்கம் ஆட்டோ மற்றும் வேன்களிலும், ஏழைவர்கம் பள்ளி பேருந்து மற்றும் மிதிவண்டிகளிலும் வந்து இறங்கிய வண்ணம் இருந்தனர். பள்ளியின் தாளாளர் ஃபாதர் இமானுவேல் பள்ளியின் முதல் தளத்திலிருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார். பள்ளியின் பேருந்து நிறுத்தும் இடத்திலிருந்து இன்சார்ஜ் தேவசகாயம் வேக வேகமாக, ஃபாதரை நோக்கி வந்தார்.

புலம்பல்கள் 09/10/2012

சேனல் யுத்தம்.

பழங்கஞ்சியாய் ஆறிப்போய் கிடந்த நித்தியானந்தா செய்தி மீண்டும் சேனல்களால் சூடுபடுத்தப்பட்டு பரிமாறப்பட்டுள்ளது. கேப்டன் நியூஸ் செய்தி சேனல் ஆரம்பித்து ஓரிரு மாதங்கள் ஆகியிருந்தாலும் பெரியளவில் பேசப்படாததால், முட்டி மோதி யோசித்து மக்களுக்கான அதி முக்கிய செய்தியான  நித்தி பராக்கிரமங்களை களமிரக்கியது கேப்டன் நியூஸ் சேனல்.