வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

ஜோதிடம் ஒரு பார்வை


எனக்கு எப்படி இப்படி ஒரு போதை தலைக்கேறியது என்று தெரியவில்லை...! இது ஒவ்வொருவருக்கும் மரபு வழியாக ஏற்றப்படுவதாக உணர்கிறேன். படித்து வேலைக்கு வரும் வரை இந்த போதை என்னை தீண்டியதில்லை. ஆனால் ஒரு இனிய காலை பொழுதில் என் திருமண பேச்சை அப்பா ஆரம்பிக்கும் போதுதான் முதன் முறையாக அதை உணர்ந்தேன். ஆம் அன்றுதான் அப்பா சில ஜாதகங்களை எடுத்துக்கொண்டு ஜோதிடர்களை
பார்க்க கிளம்பிக் கொண்டிருந்தார். எனக்கும் அதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசை. அப்பா திரும்பி வந்து எதுவும் மேட்ச் ஆகலை... என்ற போது, அப்படி என்னதான் சொன்னார் ஜோசியர் என்று தெரிந்து கொள்ள எனக்குள் ஆவல். அன்று பிடித்த பீடை இன்று வரைக்கும் தொடர்கிறது.

ஒவ்வொரு ஜோசியரும் ஒவ்வொரு காரணங்களை அடுக்க, என் அப்பாவோ செகண்ட் ஒப்பீனியனுக்காக, ஒவ்வொரு ஜாதகத்திற்க்கும் இரண்டிரண்டு ஜோசியர்களை பார்க்க ஆரம்பிக்க வீடே கலவரமானது. எனக்காக ஜோசியரை பார்த்து பார்த்து என் தம்பி பாதி ஜோசியரானான். அவன் பார்த்து செலக்ட் செய்தது மட்டுமே செகண்ட் ஒப்பீனியனுக்கு போகும். அந்த வகையில்
என் அப்பாவின் சொத்து அதிகம் கரையாமல் பார்த்துக் கொண்டதில் அவன் பங்கு அதிகம்.

திருமணத்திற்க்குப் பின் எந்த சிறு பிரச்சினை என்றாலும்... தூக்குடா கட்டை... ஓடுடா ஜோசியரை பார்க்க... என்றானது( திருமணத்திற்க்கு பிறகு தானே கஷ்டம் அதிகம்..!). ஒருத்தருக்கு வாழ்க்கையில துன்பம் ஆரம்பிச்சிதுன்னா அடுத்தடுது வரிசை கட்டி வரும்னு சொல்வாங்க. அதே மாதிரி நமக்கு பண கஷ்டம்னா, இன்னும் கொஞ்சம் கடனை வாங்கிட்டு ஜாதக கட்டை-ஐ தூக்கிட்டு போய் ஜோசியருட்ட காசை குடுத்துட்டு வருவோம். இப்படி குடுத்து குடுத்தே சிவந்த கை என்னுது. இப்படி போய்கிட்டுருந்த வாழ்க்கையில ஒரு தெளிவு... ஒரு பெரியவர் சொன்னார், தம்பி ஜோதிடம் அப்படின்னா திடமா இருக்கணும், இவனுங்க சொல்றதெல்லாம் ஜோசியம்... பாரு அதுலயே ஈயம் இருக்குது, ஈயம் மாதிரி இவனுங்க பேச்சு நேரத்துக்கு ஒரு மாதிரி மாறிடும்னாரு... சரிதான் இனிமேலாச்சும் உருப்படனும்னு.. அத்தோட அவனுங்க சமாசாரத்தையெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டேன். உட்டானுங்களா பயபுள்ளங்க...

தூக்கம் வரலன்னு நைட்டு பதினொரு மணிக்கா டிவியை போட்டு பாத்தா... சேனலுக்கு ஒருத்தனா வந்து நம்ம வூட்டு ஹால்லயே உக்காந்துருக்கானுங்க... ஆசை யார உட்டுச்சி.

சரி என்னதான் சொல்றானுவ பாத்தா.. எனக்கு பேதியே வந்துடுச்சி. ஒருத்தன் நாந்தான் நேமியாலஜிய கண்டுபுடிச்சேன்ங்கிறான். இன்னொருத்தன் பார்மெட் நியூமராலஜிய கண்டுபுடிச்சது நாந்தான்றான். இன்னொருத்தன் ப்ரொனொ டைப்பாலஜிய கண்டுபுடிச்சது நாந்தான்றான். இன்னொருத்தன் காளி கோயில் பூசாரி மாதிரி நின்னுக்கிட்டு 7 கோயிலுக்கு குளிப்பாட்டிவுட்டுருக்கேன், செய்வினைய எடுத்து வுடுவேன் அப்படின்னு அள்ளி உட்டுக்கிட்டு இருக்கான். ஏண்டா ! நீங்க செய்யற வினைய விடவாடா இன்னொருத்தன் செஞ்சிடப் போறான். இவனுங்க கண்டுபுடிச்சேன்னு போடுற பட்டியல பாத்தா, பள்ளிக்கூட வாய்பாடு பின்னாடி, மார்கோனி, நியூட்டன், தாமஸ் ஆல்வா எடிசனுக்கெல்லாம் எடமே உடமாட்டானுங்க போலருக்கே...!

இந்த கூத்துக்கெடையில, நான் இந்த ஊர கொள்ளையடிக்க இந்த தேதியில விஜயம், அந்த தேதியில விஜயம்னு சிலைடு வேற... நாட்டுக்காக ஒலிம்பிக் ஓடி தோத்தவனுங்க, ஊருக்கு வந்து எங்களுக்கு டெக்னாலஜி பத்தல, இண்டர்நெட்டு இல்லாததால் கடைசி ரெக்கார்டு தெரியலன்னு பொலம்பிக்கிட்டு திரியிரானுங்க. இந்த குரூப்பு என்னான்னா ஆளுக்கொரு லேப்-டாப் வச்சிக்கிட்டு கல்லு வித்துக்கிட்டு ஜோசியம் சொல்லிக்கிட்டு திரியுதுங்க. இதுல டாக்டருங்க மாதிரி இத கரெக்ட் பண்ணி சூரியனுக்கு பவர் ஏத்துங்க, சந்திரன டீஆக்டிவேட் பண்ணுங்கனு ஒரே அலம்பலு, இவனுங்க இன்னும் சர்ஜரி மட்டும்தான் பண்ணல. டிவி சேனலு, வெப்சைட்டு, லேப்-டாப்புன்னு இவனுங்கனால தான் டெக்னாலஜியே வளருது. நாலு தமிழ் புத்தகத்த படிச்சு, நாலு செய்யுள் மனப்பாடம் பண்ணி, ஜோசியத்தை அரையும் கொறையுமா தெரிஞ்சுக்கிட்டு, டிவில இங்கிலீசுல பீட்டரு வேற... மூணு உலகத்துக்கும் சொல்றாராமாம். இதுல நம்ம ப்ரொனோ பார்ட்டி ஒரு படி மேல... ட்ரான்சிலேசனுக்கு ஒரு பிட்டையே போட்டுக்குன்னா பாருங்களேன்... அய்யா ( அய்யாவா? அம்மாவான்னு தெரியல.. நம்ம குரூப்பு இன்னும் ஒரு வாரத்துல கண்டுபுடிச்சிரும்) கேள்வியிலயே அவரு ஒரு ஜீனியசுன்னு காட்டிடுவாரு... மொத கேள்வியே ஒங்க ப்ளெட் குரூப்..? அந்த தேயிலை தோட்டத்துல இருந்து கடனுக்கு கூட்டிட்டு வந்த பார்ட்டி, B குரூப்பை, P குரூப்புன்னு சொல்லும். இதுல என்னோட கேள்வி என்னான்னா, அந்தம்மா ஜாதகம் பாக்க வந்துச்சா? இல்ல இரத்தம் குடுக்க வந்துச்சா? ப்ளெட் பேங்குல கேக்க வேண்டிய கேள்விய நீ ஏன் கேக்குற...?

எல்லாம் கேட்டுட்டு அடுத்தது பலன் சொல்ல ஆரம்பிப்பாரு. அம்மா ஒங்க வீட்ல ஒழுங்கா தண்ணி வரல... நான் சொல்றது சரிதானே?. அது வந்துங்க... நிதமும் வருமுங்க... ஆனா காலையிலும் சாங்காலமும் எட்டுலருந்து ஒம்போது வராதுங்க... அய்யா, அப்படியே பிட்ட திரும்பி ஒரு லுக்கு உடுவாரு, பாத்தியா... எவ்வளவு பக்காவா கண்டுபுடிச்சேன் பாத்தியா... அப்படின்ற மாதிரி. பிட்டு புல்லரிச்சு போயிடும். தோட்டத்து பார்ட்டிட்ட திரும்புவாரு.. எப்படி உங்க வீட்ல தண்ணி வரலன்னு எனக்கு தெரியும்? கேள்விய வீசுவாரு. அந்தம்மா மெதுவா எஞ்சாமி நீங்களும் எங்கவூருங்களா..? உடனே பிட்டை உத்து பாப்பாரு, ஒலுங்கா சொல்லிக்குடுத்துக் கூட்டிக்கிட்டு வரலயா...? அப்படிங்கற மாதிரி. ஆனாலும் சமாளிப்பாரு, அம்மா நான் உங்க ஊரு இல்ல... ஆனா எல்லாம் ஜாதகத்துல தெரியுதே... எஞ்சாமி எங்கவூரு பஞ்சாயத்து போர்டுல தண்ணிவுடுற நேரங்கூடவா என் ஜாதகத்துல இருக்கு? அய்யா கோவத்தோட சரி சரி ஆடி போயி ஆவனிவந்தா டாப்பா வருவ.. துட்ட வச்சிட்டு கிளம்புனுவாரு. அப்பவும் பிட்டு, அபூர்வ சகோதரர்கள் கான்ஸ்டபிள்
லுக்குல, எங்கயோ போயிட்டீங்க சார்... அப்படின்ற மாதிரி பாத்துக்கிட்டுருக்கும்.  சரி சரி இவனுங்க கதை ரொம்ப நீளமா போய்கிட்டு இருக்கு... எனக்கும் தலைக்கு மேல நிறைய வேலை இருக்கு...!

அப்படி என்னா வேலைன்னு கேக்குறீங்களா..? சொல்றேன்... திண்டிவனம் பக்கத்துல ஒரு ஊர்ல ஒரு பொண்ணு குறி சொல்லுதாம், நிசத்த அப்படியே சொல்லுதான். என்னஒன்னு வயசு வித்தியாசம் பாக்காம எல்லாரையும் வண்ட வண்டயா திட்டுமாம். அப்பறம் ஏன் போறன்னு தானே கேக்குறீங்க. ஊரே அம்மனமா திரியும் போது என்க்கென்னங்க வெக்கம் !!! கேட்டுட்டு வந்து விலாவாரியா சொல்றேங்க. 

அன்புடன்
முத்துக் குமரன்.


நன்றி
பட உதவி : கூகுள்

5 கருத்துகள்:

  1. Ivvaluvum nalla sonniga. Jothidam is based on mathematics.(Yaro sonnathu) Kannaku panna therinjavan ellam TV la varan. Namma atha pakkoraom illa chanel mathrom.

    பதிலளிநீக்கு
  2. நல்லா சொன்னீங்க முரளி, ஆனா பாருங்க கணக்குல 1+1 = 2 தான், யாரு கூட்டுனாலும் இரண்டுதான், ஆனா பயபுள்ளங்க ஒவ்வென்னும் ஒவ்வொரு மாதிரி பதில் சொல்லுதுங்க. இதுல பரிகாரம் பண்ணுங்க ஆன்சர் 1-ன்னு வரும்னு அட்வைஸ் வேற.

    பதிலளிநீக்கு

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்