திங்கள், 13 ஆகஸ்ட், 2012

கானக்குயில்கள் -1எதையவது எழுத வேண்டும் என்று 2009 ஆம் ஆண்டு ஆரம்பித்த வலைத்தளம் இது. ஆனால் கடந்த நான்கு வருடங்களாக எதை எழுதுவது என்று தெரியாமல் அப்படியே வைத்திருந்து ஒரு வழியாக மூன்று நாட்களாக எதையோ கிறுக்கியாயிற்று. மீண்டும் பழையபடி சரக்கு எதுவும் இல்லாததால் எதை எழுதுவது என்று தலையை பிய்த்துக் கொண்டு படுத்ததில் இசையை பற்றி எழுத, கனவில் வந்த தேவதை சொன்னது. எனக்குத்தான் இசையை பற்றி எதுவும் தெரியாதே என்றேன். கவலைப் படாதே இசைக்கு மொழி கிடையாது என்றது. இருந்தாலும் கவலையில்லை எனக்குத்தான் தமிழ் தவிர எதுவும் தெரியாதே என்றேன். அதிகமா பேசுற நீ... அதிகமா பேசுற நீ... என்றபடி பறந்தது. ஃபிகரை பறி கொடுத்த வேதனையில் எழுந்த எனக்கு, சட்டென தோன்றியது ஐடியா ! பேசாம உலக இசை குயில்களை பற்றி எழுதினால் என்ன? முடிவெடுத்து விட்டேன்! விரைவில் வருகிறேன்- குயில்களோடு . 

 


அன்புடன்
முத்துக் குமரன்.

நன்றி
பட உதவி : கூகுள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்