வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

ஆடி கொண்டாட்டம்

ஆடி மாதம் - விவசாயிகளின் பொன்னான மாதம். கிராமங்கள்தோரும் ஆடிப்பட்டத்தை தேடி விதைத்துவிட்டு, ஏக்கத்துடன் வானம் பார்த்து கண்ணீர் மழை விட்டு, மழையை எதிர்ப்பார்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு, வருண பகவான் மனமிரங்கி சிறிது சிறிதாக கருனை மழையை கா(கொ)ட்ட துவங்கிருக்கிறார். அதனால் விவசாயிகளுக்கு கொண்டாட்டம்.

ஆனால் நகரங்களிலோ வேறுவிதமான கொண்டாட்டங்கள். நோன்புகள், கோவில் குடமுழுக்குகள் மற்றும் திருவிழாக்கள் களை கட்ட துவங்கியுள்ளன. வியாபாரிகளுக்கோ சில சங்கடங்கள். வியாபாரம் நடக்கிறதோ இல்லையோ, உரிமையோடு கடையேறி பையினுள் கைவிட்டு, பணம் எடுத்து ரசீது கொடுக்கும் விழாக்குழு தலைவர்கள் மற்றும் தொ(கு)ண்டர்கள். அன்புடன் எடுத்துக் கொள்ளும் சிலர். அன்பான் மிரட்டலுடன் பறித்துக்கொள்ளும் பலர். மனமுவந்து கொடுப்பவர் சிலர். செய்த தவறுகளுக்கு பரிகாரமாக அன்ன தானம், அலங்காரங்களை ஏற்றுக்கொள்ளும் பலர்.


வருடக்கணக்கில் போரடி பெற்ற சாலைகளிலெல்லாம் திருவிழா பேனர்களுக்காக குழிபறித்து கொண்டிருக்கும் சிலர். அதனருகே பேனரில் அடைமொழி விடுபட்டதற்காய் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பலர்.

வெட்டிய குழிகளில் நீர் நிறம்பி புதிதாய்யிடப்பட்ட சாலைகள் பல் இளிக்க, அதை தடுக்க வேண்டிய அமைச்சர் அதே பேனரில் பல் இளிக்கிறார்.

இனி அடுத்த சில நாட்களுக்கு இன்னிசை கச்சேரி, குத்தாட்டம் ஆகியவற்றுடன், யாருக்கு முதல் மரியாதை என்ற கத்திக் குத்தாட்டத்துடன் கூடிய உயிர் பலியுடன் திருவிழா இனிதே நிறைவுறும்.

ஆனால் ஒருவேளை அன்ன தான உணவிற்காகவும், இலவசமாய் கிடைக்க போகிற ஒருவேளை கூழுக்காகவும் ஏங்கி நிற்க்கும் ஏழையர் கூட்டம், அடுத்த வருட திருவிழாவிற்காகவும் வேண்டி நிற்க்கும்.

இதுதான் இந்தியா - பல் இனங்களின் கூட்டமைப்பு.
இதுதான் கொண்டாட்டம் - ஏழை மனங்களின் பரிதவிப்பு.

அன்புடன்
முத்துக் குமரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்