சனி, 11 ஆகஸ்ட், 2012

பெண்ணென்றால் கருணை

வாழ்வின் இருள் படர்ந்த நாட்கள் - அடுத்து என்ன செய்வது என்று தெரியாத பொழுதுகள். பலத்த சிந்தனையுடன் கடற்கரை மணலில் நான். சற்று இடைவெளியில் இளம் காதலர்கள்.

அவள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தான், பேசி முடிந்து நடக்க எழுந்தான்.அண்ணே... நீட்டிய கையுடன் யாசித்தாள் சிறுமி.

ச்சீ... போ... அதட்டினாள் காதலி. மேலும் சில அடிகள் நகர்ந்தவன் நின்றான். மீண்டும் சிறுமியிடம் வந்தான்.பின்புறம் கைவிட்டு காசு எடுத்துக் கொடுத்தான். சிறுமியின் கோலம் அவனை வறுத்தியிருக்க கூடும்.


யாசகர்கள் இலக்கணப்படி சிறுமி மீண்டும் கை நீட்டினாள் அவளிடம். போட்டாச்சில்ல, அப்புறம் என்ன, தள்ளி போ... அதட்டினாள். மருண்டபடி பின்வாங்கினாள் சிறுமி. இருண்டபடி நின்றிருந்தான் அவன். என்ன நினைத்தானோ, சரி நீ பஸ் ஏறி போய் விடு, எனக்கு அவசர வேலை இருக்கு என்றான். உன்ன நம்பி பணம் கூட எடுத்துட்டு வரல என்றாள் அவள். பணத்தை கொடுத்து விரைந்து சென்றான்.

என் மனம் சிந்தித்தது.
ஏன் விட்டுச் சென்றான் - ஒருவேளை இவள் கருனையை கண்டதாலோ,
ஏன் கொடுக்க மறுத்தாள் - அவன் பணம் இவள் உரிமை என்று நினைத்ததாலோ.

இலக்கியம் பெண் என்றால் கருணை, இரக்கம் என்கிறது. இந்த இரண்டையும் மீறி இவர்களால் எதையும் எளிதாக நிராகரிக்கவும் முடிகிறது அது காசானாலும், காதலானாலும்.

ஏம்மா...என்னதான் செலவை இன்னொருத்தன் ஏத்துக்கிட்டாலும், அதுக்காக பஸ்-க்கு காசு கூட இல்லாமலா வருவீங்க. பின்ன என்னதான் அந்த கைபையில எடுத்திட்டு வருவீங்க -
கேட்க நினைத்தது மனம்.
தடுத்தாட் கொண்டது நாகரீகம்.அன்புடன்
முத்துக் குமரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்