ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

இயற்கையை இழந்து நின்றோம்

வயல்கள் ப்ளாட்டாக மாறி வருகுது.
உலகின் வெப்பமோ ஏறி வருகுது.

சிறுவயதில் ஏறி விளையாடிய மரங்கள் இன்று இல்லை.
மரங்களில் குதித்து ஓடிய அணில்கள் இன்று இல்லை.செம்பருத்தியில் மதுவருந்த வரும் தேன்சிட்டு இல்லை.
தேன்சிட்டை பிடிக்கவரும் பருந்து கூட்டம் இல்லை.
படை போல் வளரும் தும்பை மற்றும் தாமரை செடிகள் இல்லை.
தும்பையை நாடி வரும் தும்பி மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் இல்லை.

வண்ணத்துப்பூச்சி பிடிக்க அலையும் சிறுவர் சிறுமிகள் இல்லை.
அவர்களை விரட்டி அடிக்க திரியும் அன்னையர் தந்தையர் இல்லை.

அன்று உலகமே வீடானது, இன்று வீடே உலகமானது,
அன்று உணவே மருந்தானது, இன்று மருந்தே உணவானது.

ஓடி விளையாடிய பிள்ளைகள் எல்லாம்
கூனி கிடக்குது கணிணியின் முன்னால்.

இருபதில் தலை நரைத்த பிள்ளைகள்,
நாற்பதில் மறை கழன்ற தந்தைகள்.

செயற்கையை தேடி அலைந்தோம்
இயற்கையை இழந்து நின்றோம்.

டிஸ்கி : இது கவிதையோ என்ன எளவோ தெரியல. எழுதுறது என் இஷ்டம்.
                 படிக்கிறது உங்க கஷ்டம்.
அன்புடன்
முத்துக் குமரன்.


நன்றி - பட உதவி :  கூகுள்

2 கருத்துகள்:

  1. அருமையான கவிதை ..அல்ல அல்ல வாழ்வியல் என் முக நூலில் பகிர்கிறேன் முத்துக்குமரன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.

      நீக்கு

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்