வியாழன், 17 ஜனவரி, 2013

இழந்தது என்ன...?


உனையன்றி வேறு
துணையில்லை என்று...
செப்பிய நாக்கு
கொட்டியதென்ன !

பிரிவின்றி உன்னை
சுற்றிவந்த உறவை ...
வெட்டிய மனமேநீ
கொண்டதுயென்ன !

துணிவின்றி நின்று
புதுவுறவு கொன்று...
சுற்றிநின்ற உன்னுறவை
சென்றடைந்ததென்ன !

வினையின்றி இசைந்த
உன்முடிவு கேட்டு...
திறனின்றி இதயம்
துடிதுடித்ததென்ன !

உழைப்பின்றி மனதில்
கட்டிவந்த கோட்டைநீ...
காட்டிய விசையில்
இடிந்ததுயென்ன !

மழையின்றி வாடும்
பயிர்களை போலே...
உன்துணையின்றி நெஞ்சம்
இருண்டதுயென்ன !

துயரின்றி உலகை
சுற்றிவந்த மனமே...
பேதையின் போதையில்
இழந்ததுயென்ன !

உணர்வின்றி அமர்ந்து
எண்ணியபொழுது உண்மையில்
இழந்தது மதியன்றி
வேறென்ன !!!



அன்புடன்
முத்துக் குமரன்.
நன்றி : பட உதவி - கூகுள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்