செவ்வாய், 15 ஜனவரி, 2013

புலம்பல்கள் - 15/01/2013


ஆதாரம்

 சபரிமலையில் மகரஜோதி எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் செவ்வன முடிந்தது.  பக்தர்கள் வசதிக்காக ஆம்புலன்ஸ், மருத்துவ முதல் உதவி ஆகியவை தயாராக இருந்தன. 2011ம் ஆண்டு மகரஜோதி தரிசனம் 102 உயிர்களை காவு கொண்டது. பின்பு மகரஜோதி உண்மையா பொய்யா? என்று ஊடகங்களிலும் நீதிமன்றங்களிலும் பட்டிமன்றமே நடந்தது. இறுதிவரை முடிவு தெரியவில்லை. ஆனால் மூத்த தந்திரி கண்டரரு மகேஷ்வரரு நாசூக்காக ”மகரஜோதி என்பது மகர சங்கரம தினத்தில் கோயிலின் எதிரில் கிழக்கு வானத்தில் உதிக்கும் மகர நட்சத்திரமாகும். இதே நாளில் திருவாபரணம் சார்த்தி தீபாராதனை நடக்கும் போது, மூல ஸ்தானமான பொன்னம்பலமேட்டில் ஏற்றப்படும் தீபம் மகரவிளக்கு” என்ற உண்மையை சொன்னார். அதாவது பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படுவது ஒரு விளக்கு மட்டுமே என்பதை பக்தர்கள் மனம் நோகமல் சொன்னார். ஆனால் கன்னிச்சாமிகள் மட்டுமல்லாமல் குருசாமிகளே இந்த உண்மையை விரும்பவில்லை. நாங்கள் பார்த்துவிட்டு வந்தது மகர ஜோதிதான் என்று சாதிக்கிறார்கள். மொத்தத்தில் இந்த ஏமாளிகளை வைத்து இதுவரை 160 கோடி கல்லா கட்டிவிட்டது தேவசம்போர்டு.

ஏமாறாதே...ஏமாறாதே... ஏமாற்றாதே...ஏமாற்றாதே...


சேதாரம்

பதவி விலகப்போகும் கடைசி மாதத்தில் கூட 18 கோடிக்கு சுற்றுபயணம் செய்து தன் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார் குடியரசு தலைவ(வி)ர் பிரதிபா பாட்டீல். இவர் மொத்தமாக சுத்தினது 205 கோடியாம். குடியரசு தலைவர் பதவி என்பதே ரப்பர் ஸ்டாம்ப் பதவிதான் என்பது எல்லேருக்கும் தெரியும். சரி உழைச்சு ஓடா தேஞ்ச ஒரு தமிழன் ஜாலியா இருக்கட்டும்னு நம்ம அப்துல் கலாம் அய்யாவை அனுப்பி வச்சா... அவரு என்னான்னா கடையில் தயிர் சோத்த வாங்கி தின்னுபுட்டு, ராஜ்பவன்ல குடிச்ச காபி, ஜூஸ்க்கெல்லாம் சம்பளத்துல இருந்து காச குடுத்துட்டு, பிழைக்க தெரியாத புள்ளயாட்டமா வெளியில வந்திருக்காரு!. எங்க வீட்டாண்ட இருக்குற சிங் ஒருத்தன் நம்மாளு திறமைய பாத்து வுழுந்து வுழுந்து சிரிக்கிறான். ஆனா ஒன்னு, அவனே, மூக்குமேல விரல வைக்கிற மாதிரி நம்ம ராஜா... தமிழன்னா யாருன்னு உலகத்துக்கே காட்டிட்டு வந்துட்டாரு. சிங்கோட மொழி கோளாரோ என்னமோ தெரியல இத்தன சைபருக்கு எத்தனை மதிப்புன்னு தெரியாம பாவம் அவரே கன்பீஸ் ஆகிட்டாரு.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது....

சுகாதாரம்

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மஹா கும்பமேளா(பெரிய கிண்ண திருவிழான்னு எங்கேயோ படிச்ச ஞாபகம்) ஆரம்பிச்சாச்சு. மகாசிவராத்திரி அன்னக்கி மட்டும் ஒரு கோடிபேர் கங்கையில குளியல் போட்டாங்களாம். ஏற்கனவே சாக்கடையாகி போன கங்கையில ஒரு கோடி பேர் குளிச்சா என்ன ஆகியிருக்கும்னு நினைக்கவே பயமா இருக்கு. அதுமட்டுமில்லாம அந்த தண்ணி இந்நேரம் எத்தனை பாட்டில்ல அடைக்கப்பட்டு தீர்த்தம் என்ற பேரில் ஊர் ஊரா பயணிக்கிதோ தெரியல. ஆனா ஒன்னுமட்டும் தெரியும், பல டாக்டருங்களே இறை பக்தியின் பெயரால் அங்க குளிச்சிட்டு வீட்டுக்கு வந்து டெட்டால் டோட்டல் வாஷ்ல இறங்கிருப்பாங்க.

கடவுள் செய்த பாவம்... இங்கு காணும் துன்பம் யாவும்...

அன்புடன்
முத்துக் குமரன்.

நன்றி : பட உதவி - கூகுள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்