ஞாயிறு, 10 நவம்பர், 2013

அன்றும் இன்றும்

 


இரவின் மடியில்
நிலவின் ஒளியில்
குழந்தைகள் கண்கட்டி
விளையாடியது - அன்று.

அறையின் மறைவில்
திரையின் ஒளியில்
பகைவனை வெட்டி
விளையாடுது - இன்று

முற்றத்தில் அமர்ந்து
சோழிகள் உருட்டி
நங்கைகள் பல்லாங்குழி
விளையாடிது - அன்று

சோகமாய் அமர்ந்து
மனதுக்குள் குமைந்து
சீரியல் பார்த்து
திட்டித்தீர்க்குது - இன்று

கூட்டமாய் அமர்ந்து
கலந்து உரையாடி
ஆண்கள் அறிவை
வளர்த்தது - அன்று

தனிமையில் அமர்ந்து
கணினியை படித்து
மேதமை செருக்கோடு
திரியுது - இன்று.அன்புடன்
முத்துக் குமரன்.
நன்றி : பட உதவி - கூகுள்

2 கருத்துகள்:

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்