ஞாயிறு, 10 நவம்பர், 2013

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

புலிகளை வெறுக்கும் பெரியவர்

எனக்கு தெரிந்த ஒரு பெரியவர், விடுதலை புலிகளை பற்றி பேசும்போது மிக கடுமையான கருத்துக்களை வெளிப்படுத்துவார். ஏன் இவருக்கு விடுதலை புலிகள் மீது இவ்வளவு கோபம் என்று நான் நினைப்பதுண்டு. அதற்க்கான விடை இன்று கிடைத்தது. பத்து ஆண்டுகளுக்கு முன் இவர் ஒருவருடைய பரிதாபமான தோற்றத்தை பார்த்து, குறைந்த வாடகைக்கு வீடு

வியாழன், 25 ஏப்ரல், 2013

முரட்டு வைத்தியம்

கல்நார் ஓடுகளை கொண்ட பெரிய வரவேற்பறை, சுவற்றின் ஓரமெங்கும் வெற்றிலை சாற்றின் ஓவியங்கள். அறையின் நடுவே சிமெண்ட் பெஞ்சுகள். ஆங்காங்கே சிறுவர் பெரியவர் பேதமின்றி முக்கல் முனகல்கள் ஓசைகள்.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

இரத்த வங்கிகள் செய்வது சேவையா? வியாபாரமா?

 கடந்த சில நாட்களாக இரத்த தானம் மற்றும் இரத்த வங்கிகளின் செயல்பாடுகள் பற்றி சில மனக்குமுறல்களை சமூக வலைத்தளங்களில் கடந்து செல்ல நேரிட்டது. சில கருத்துக்களுக்கு நான் பதிலளித்திருந்தாலும் சற்று விரிவாக என் எண்ணத்தை பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை.

வெள்ளி, 18 ஜனவரி, 2013

காதலின் சுகம்



சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்...

அவசர அவசரமாக டேபிளில் கிடந்த காகித கற்றைகளில் தேடி செல்போனை எடுத்து அழைப்பை ஏற்றாள்.

ஹாய் யசோதா... ஐ வாண்ட் டு டாக் டு யூ ஆஃப்டர் ஆஃபிஸ் ஹவர்ஸ்.

எனிதிங் சீரியஸ்... அசோக்?

லிட்டில்.

வியாழன், 17 ஜனவரி, 2013

செவ்வாய், 15 ஜனவரி, 2013

புலம்பல்கள் - 15/01/2013


ஆதாரம்

 சபரிமலையில் மகரஜோதி எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் செவ்வன முடிந்தது.  பக்தர்கள் வசதிக்காக ஆம்புலன்ஸ், மருத்துவ முதல் உதவி ஆகியவை தயாராக இருந்தன. 2011ம் ஆண்டு மகரஜோதி தரிசனம் 102 உயிர்களை காவு கொண்டது. பின்பு மகரஜோதி உண்மையா பொய்யா? என்று ஊடகங்களிலும் நீதிமன்றங்களிலும் பட்டிமன்றமே நடந்தது. இறுதிவரை முடிவு தெரியவில்லை. ஆனால் மூத்த தந்திரி கண்டரரு மகேஷ்வரரு நாசூக்காக ”மகரஜோதி என்பது மகர சங்கரம தினத்தில் கோயிலின் எதிரில் கிழக்கு வானத்தில் உதிக்கும் மகர நட்சத்திரமாகும். இதே நாளில் திருவாபரணம் சார்த்தி தீபாராதனை நடக்கும் போது, மூல ஸ்தானமான பொன்னம்பலமேட்டில் ஏற்றப்படும் தீபம் மகரவிளக்கு” என்ற உண்மையை சொன்னார். அதாவது பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படுவது ஒரு விளக்கு மட்டுமே என்பதை பக்தர்கள் மனம் நோகமல் சொன்னார். ஆனால் கன்னிச்சாமிகள் மட்டுமல்லாமல் குருசாமிகளே இந்த உண்மையை விரும்பவில்லை. நாங்கள் பார்த்துவிட்டு வந்தது மகர ஜோதிதான் என்று சாதிக்கிறார்கள். மொத்தத்தில் இந்த ஏமாளிகளை வைத்து இதுவரை 160 கோடி கல்லா கட்டிவிட்டது தேவசம்போர்டு.

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


உலகெங்கும் வாழும் இனிய தமிழ் உள்ளங்களுக்கு, என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.






அன்புடன்
முத்துக் குமரன்.

நன்றி : பட உதவி - கூகுள்

வெள்ளி, 11 ஜனவரி, 2013

விவசாயியின் ஒரு தலை காதல்


காத்திருந்து காத்திருந்து
விழியிரண்டும் பூத்ததினால்,
வீற்றிருந்த ஆற்றங்கரை
எழில் குறைந்து போனதடி.

மேட்டுவயல் மீதுனது
எழிலுருவம் கண்டதினால்,
ஆற்றுமடை திறந்ததுபோல்
மகிழ்ச்சி வெள்ளம் பாய்ந்ததடி.

உயிர் வலி


உருண்டு புரண்டு
படுத்தாலும்,
விழி இரண்டும்
துஞ்சவில்லை.
இமை இழுத்து
போர்த்தினாலும்,
இவ்வுலகம் இன்னும்
இருளவில்லை.

புதன், 2 ஜனவரி, 2013

புத்தாண்டு கொண்டாட்டம்


ஆங்கில புத்தாண்டு என்றாலே ஒரு குதூகலம். நகரங்களில் திருவிழா கோலம்தான். கிராமங்களில், அன்று ஒருநாள் அரசு விடுமுறை அவ்வளவுதான், தவிர தமிழ் புத்தாண்டுக்கு மட்டுமே அங்கு மரியாதை. எனக்கு சிறுவயது முதலே பண்டிகை நாட்கள் என்றாலே அலர்ஜிதான். அதற்கான காரணங்கள் பொதுவெளியில் பகிர தக்கதல்ல என்பதால் விட்டுவிடுவோம்.