நூலருந்த பட்டம் மீண்டும் கையில் அகப்பட்ட மகிழ்ச்சி சில நாளாக.
வாழ் நாளெல்லாம் நான் வடித்த கண்ணீருக்கு இறைவன் தந்த பரிசாக.
இது சரியா, தவறா என்ற கேள்வியை கூட கேட்காத மடமை.
ஒருவேளை கேட்டால் கிடைக்கும் பதிலை கூட விரும்பாத கயமை.
இதுவரை நான் நேசித்தவை எல்லாம் ஆனது நிராசை.
இதுவா என்னை படைத்த இறைவனின் விபரீத ஆசை.
இன்று என் தேவதையின் மனதில் ஒரு இறுக்கம்,
அதில் எனக்கும் உண்டு பங்கு என்ற கலக்கம்.
வெறித்தபடி வானம் பார்த்த என்னை
விழிகிழித்தபடி எட்டி பார்த்த கண்ணீர்
எத்தனை காலம் இப்படி ஒரு வேதனை
என்று தீரும் இந்த பிறப்பின் ஊழ்வினை
என் பிறப்பின் நோக்கமறிய
இறைவனின் கழுத்தை பிடிக்க ஆசை.
என் வலியின் தாக்கமறிய
அவனை காதலிக்க நிர்பந்திக்க ஆசை.
குறிப்பு:
இதை கவிதை என்று நினைச்சு, சொற் குற்றம் பொருட்குற்றம் எல்லாம் கண்டுபிடிக்காதீங்க. மனசுல தோன்றியத சுவத்துல எழுதி வச்சேன் அவ்வளவுதான்.
அன்புடன்
முத்துக் குமரன்.
நன்றி : பட உதவி - கூகுள்
பதிலளிநீக்குவணக்கம்!
முத்துக் குமரன் இன்வலையை
முந்தி வந்து படித்திட்டேன்!
கொத்து மலா்கள் பூத்தாடும்
கோலம் கண்டு மகிழ்ந்திட்டேன்!
கத்து கடலின் தொடா்அலைபோல்
கவிதை அலையை எழுப்பிடுக!
சத்து மிக்க தண்டமிழைச்
சாற்றி நன்றே வளா்ந்திடுக!
கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு
kambane2007@yahoo.fr
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஉங்கள் அன்புக்கும் ஆதரவிற்க்கும் நன்றி ஐயா.
நீக்குஉள்ளத்தில் பொங்கும் உணர்ச்சிகளின் எழுத்துப் பிராவகம் தான் கவிதை. எழுத்துப் பிழைகளை மட்டும் சரிப் பார்க்க. உதா. கயைமை - கயமை. :)
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும், உரிமையுடன் சுட்டிகாட்டியதற்க்கும் நன்றி நண்பரே.
நீக்குஇன்னும் எழுதுங்கள் ! மின்னும் முத்துக்கள்!
பின்னும் வருவேனே கருத்தும் தருவேனே
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா
நீக்கு// வெறித்தபடி வானம் // அருமை .. தொடருங்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே.
நீக்குஉள்ளத்தின் உணர்ச்சிகளை அப்படியே எழுத்தில் இட்டுள்ளது மிகவும் அருமையாக, அழகாக, அற்புதமாக, ஆச்சர்யமாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
நீக்குஅன்புடன் VGK
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அய்யா.
நீக்குஎன் பிறப்பின் நோக்கமறிய
பதிலளிநீக்குஇறைவனின் கழுத்தை பிடிக்க ஆசை.
////////////////
இது ரொம்ப ரொம்ப ஓவர்......
மற்றப் படி அழகு
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.
நீக்குமுத்துக்குமரன்,
பதிலளிநீக்குஉங்கள் கவிதை மிக மிக அருமை.
எனக்குக் கூட இறைவனை இப்படி கேட்க ஆசை தான்.
பதில் கிடைத்து விடுமா?என்ன?
உங்கள் உள்ளக் கிடக்கையை அழகாக வெளிப்ப்டுத்தியிருக்கீறீர்கள்.
பாராட்டுக்கள்.
ராஜி
//எனக்குக் கூட இறைவனை இப்படி கேட்க ஆசை தான்.
நீக்குபதில் கிடைத்து விடுமா?என்ன?//
பதில் கிடைக்கவிட்டாலும் என்ன கோவிலிலாவது சென்று கேட்டுவிடமாட்டோமா...?
தங்களின் முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி தோழி
கடவுள் மீது ஏன் இத்தனை கோபம் காதலிக்க கழுத்தை பிடிக்க சொல்கீறீர்களே
பதிலளிநீக்கு//இதுவரை நான் நேசித்தவை எல்லாம் ஆனது நிராசை.//
நீக்குஇதுக்குத்தான் இத்தனை கோபம்.
உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி ப்ரேம் குமார்.