திங்கள், 10 டிசம்பர், 2012

புலம்பல்கள் - 10/12/2012

புதுமை


விரைவில் செல்போனில் டி.டி.

தப்பா வேறு யாரையும் கற்பனை பண்ணிக்காதீங்க மக்களே. நான் தூர்தர்சன சொன்னேன். தூர்தர்சன் விரைவில் செல்போனில் வலம் வரப்போகுதான். எவன் பாக்கப்போறான்னு கேக்குறீங்களா...? சில கேள்விகளுக்கு விடையே கிடையாது. முதல் முறையா பார்வையாளர் மதிப்பீட்டுக்குழு, நிகழ்ச்சி ஆலோசனை குழுன்னு ரெண்டு குழு அமைச்சிருக்காங்களாம். அதனால இனிமே தரமான புது புது நிகழ்ச்சிகளா குடுக்கப்போறாங்களாம். தமிழ் நாட்டுல முதல் தனியார் தொலைகாட்சி சேனலா சன் டிவி ஆரம்பிச்சு கிட்டதட்ட 20 வருசம் ஆகப்போகுது. இதோ ஒரு வருசத்துக்கு முன்னால ஆரம்பிச்ச புதிய தலைமுறைக்கூட சக்க போடு போடுது. கொஞ்ச நாள் முன்ன ஆரம்பிச்ச தினத்தந்தி கூட அவங்களால முடிஞ்ச அளவுக்கு மண்டைய பிச்சுக்கிட்டு எதையோ போடுறாங்க. நான் மூக்கு ஒழுகிகிட்டு பார்த்த நாள்ல இருந்து இன்னக்கி வரைக்கும் அதே போரான நிகழ்ச்சிகள். இப்போ கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம். போடுறதும் போடுறீங்க நல்ல கிரியேட்டிவான ஆளா போடுங்க, வந்தவன் கவர்மெண்ட் ஜாப் கிடைச்சிருச்சின்னு, ஆபிஸ் ஓரமா தலைகானிய போட்டு தூங்கிடாம இருக்க அதுக்கு ஒரு ஆள சேத்து போடுங்க.

ரொம்ப.... லேட் பிக்கப்புடா நீங்க.


உரிமை


இன்னக்கி, அதாவது டிசம்பர் பத்தாம் தேதி மனித உரிமைகள் தினமாம். அதை எல்லாரும் கடைபிடிங்கன்னு ஐ.நா சொல்லுதாம். அதுக்கு முன்னாடி மனித உரிமைகள்னா என்னான்னு சொன்னா தேவலாம். காசாவிலும், சிரியாவிலும், பர்மாவிலும் எகிப்திலும் நடக்கிறது மனித உரிமை மீறலா? இல்லை? அமெரிக்காவிற்க்கு வேண்டப்பட்ட நாடுகளில் நடக்குற உரிமை மீறல்களை பற்றி என்றைக்காவது ஐ.நா கவலைப்பட்டதுண்டா ? மனித உரிமை மீறல்களையும் தாண்டி இனப்படுகொலைகள் நடந்த நாடாக ஐ.நாவின் அங்கமான செஞ்சிலுவை சங்கமும் கட்டியம் கூறிய இலங்கை மீது ஐ.நா எடுத்த நடவடிக்கைகள் தான் என்ன...? ஒருவேளை நீங்களே மனசு வந்து எதையாவது சொன்னா கூட , எவனாவது மதிக்கிறானா உங்கள...? திராவிட தலைவர் மாதிரி தினமும் ஏதாவது அறிக்கை குடுத்து நானும் ரவுடிதான்னு கணக்கு காட்டி பீத்திக்கிறீங்க. உங்கள நினைச்சா ஒரே சிப்பு சிப்பா வருது.

சரியான.... சிரிப்பு போலிசுடா நீங்க.

அருமை

 

சோனியாஜியும், மன்மோகன்ஜியும் உலகின் பவர்புல்லான மனிதர்களில் ஒருவராம். இதுல சோனியா அம்மையாரை கூட சேத்துக்கலாம்தான். எந்த கேட்டகிரியில மன்னுஜிய சேத்தானுங்கன்னுதான் தெரியல. டேய்... குரூப் லீடர் எவண்டான்னு கேட்டா கூட, லீடர் நான் நல்லவந்தான் ஆனா கூட்டாளிங்கதான் திருட்டு பயலுவன்னு ஒப்புதல் வாக்குமூலம் குடுக்குற மன்னுஜிய ஒருவேளை இந்தியாவின் இரும்பு மனிதர்னு நெனைச்சிட்டனுவலோ...? இதை கேட்டதும் காங்கிரஸுகாரங்களே எது எதுலயோ சிரிக்கிறானுங்க. என்னவோ போங்கடா...  இதையெல்லாம் எப்படி கணக்கெடுக்குறானுங்கன்னே தெரிய மாட்டேங்குது. ஆனா போஸ்டர் அடிக்க ரெடி ஆயிட்டானுங்க.

என்னவோ போடா மாதவா...



அன்புடன்
முத்துக் குமரன்.


8 கருத்துகள்:

  1. இன்றுதான் செய்தியில் கேட்டேன்,அதற்குள் ஒரு பதிவையே போட்டு விளக்கிட்டிங்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  2. புதுமை//இதுதான் அவங்க "டக்கு" போல...
    உரிமை//
    அமெரிக்காவிற்க்கு வேண்டப்பட்ட நாடுகளில் நடக்குற உரிமை மீறல்களை பற்றி என்றைக்காவது ஐ.நா கவலைப்பட்டதுண்டா ?// பெரியண்ணனுக்கு வேண்டப்பட்டவங்க எது செஞ்சாலும் கவலை இல்லை. பெரியண்ணன் சூடாகி மனித உரிமையை நிலை நாட்டனும்னா அங்க எண்ணெய் இருக்கனும், இல்லாட்டி ஆயுதம் வாங்க பணம் தேறணும் அவ்வளவுதான் இதுல மனித உரிமையாவது மண்ணாங்கட்டியாவது... நல்ல பதிவு நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த பெரிய(வெ)ண்ணை என்னக்கி சூடாகி நெய்யாகி இலங்கையை பொறிச்சு எடுக்குறது? ஏதோ நம்மால புலம்பதான் முடியும். நான் என்ன நினைக்கிறேன்னா, அவனுங்க கூட ஏதோ முடிவெடுக்கலான்னுதான் நினைச்சிருப்பானுங்க போல. நம்ம திராவிட தலைவர் குடுத்துவுட்ட கடுதாசியில காண்டாகிதான் எதுவும் பண்ணல போல.

      கருத்துக்கு மிக்க நன்றி நண்பா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. பாமரனின் ஆயுதம் புலம்பல்கள் மட்டும்தானே நண்பா.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

      நீக்கு

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்