சேனல் யுத்தம்.
பழங்கஞ்சியாய் ஆறிப்போய் கிடந்த நித்தியானந்தா செய்தி மீண்டும் சேனல்களால் சூடுபடுத்தப்பட்டு பரிமாறப்பட்டுள்ளது. கேப்டன் நியூஸ் செய்தி சேனல் ஆரம்பித்து ஓரிரு மாதங்கள் ஆகியிருந்தாலும் பெரியளவில் பேசப்படாததால், முட்டி மோதி யோசித்து மக்களுக்கான அதி முக்கிய செய்தியான நித்தி பராக்கிரமங்களை களமிரக்கியது கேப்டன் நியூஸ் சேனல்.
இது புரியாத நித்தி வழக்கம் போல் சன் டிவி யையும், ஆர்த்தி ராவையும் சகட்டு மேனிக்கு விளாசினார். கேள்வி கேட்க வேண்டிய பேட்டியாளர், சத்சங்கத்திற்க்கு வந்த தொண்டர் போல், சாமி கோபித்துக் கொள்ளாத அளவு கேள்விகளை கேட்டார். பின்ன கேப்டன் நியூஸை எல்லாம் ஒரு சேனலாக நம்பி 134 நாடுகளில் கடை விரித்திருக்கும் சி.ஈ.ஓ நித்தி பேட்டி கொடுக்குறதுன்னா சும்மாவா ?
பதிலுக்கு சன் டிவி லெனின் கருப்பனையும், ஆர்த்தி ராவையும் குந்த வச்சு, அவர்களுக்கு தேவையான பதில் மட்டும் வருவது போல ஒரு பேட்டியை ஒளிபரப்பியது. இது சன் டிவியின் வழக்கமான ஃபார்முலா அதனால் அதை பற்றி கவலை பட வேண்டியதில்லை. ரெண்டு சேனல்-லயும் ஒரே டாக்குமெண்ட் யுத்தமா இருந்தது. அந்த பக்கம் நித்தி ஆசுபத்திரி டாக்குமண்ட், ஜட்ஜ்மெண்ட் காப்பின்னு பிலிம் காட்டுனாரு. இந்தப்பக்கம் நித்தியோட NDA டாக்குமெண்ட், அமெரிக்க கம்ளெண்ட் காப்பின்னு ஆர்த்தி ராவ் காட்டுனாங்க. நமக்கு ஒரு எளவும் புரியல. ஆனா ஒன்னு புரிஞ்சது இவ்வளவு கோல்மால் பண்ணாலும் நித்தி, லெனின் மற்றும் ஆர்த்தி ராவ்-வை கொஞ்சம் மரியாதையோடதான் பேசினாரு. அந்த பண்பாடு கூட லெனின் கிட்ட காண முடியல. ஆர்த்திராவ் சில சமயம் அவர் இவர்ன்னாங்க, பல நேரம் அவன் இவன்னாங்க. நமக்கு நல்லா பொழுது போச்சு.
இதைப்பாத்த பாலிமர் சேனல் அடுத்ததா நாட்டாமை பண்ண கிளம்பிட்டானுங்க. ஆனா ”மக்களுக்காக” கண்ணன் அருமையாக பேட்டிகண்டார். எங்கெங்கு ஆப்பு செருக வேண்டுமோ அங்கங்கு செருக தவறவில்லை. உதாரணத்திற்க்கு, லெனின் ஏற்கனவே காந்த படுக்கை மோசடி செஞ்சிட்டுதான் ஆன்மீகத்திற்க்கு வந்தார்னு நித்தி சொல்ல, உடனடியா கண்ணன், ஒரு வேளை அத விட ஆன்மீகத்துல நல்ல வருமானம் வருதுன்னு வந்துருப்பார் என்றார். ஆர்த்தி ராவை பற்றி நித்தி வெளியிட்டிருந்த செய்தி குறிப்பை பற்றி பேசியவர், உங்களது இந்த செய்திகுறிப்பை படித்து முடித்ததும் போய் குளித்து விட்டுதான் வரவேண்டும் போல் இருக்கிறது அவ்வளவு அழுக்காக இருக்கிறது என்றார். இதற்க்கு நித்தி சிரித்த சிரிப்பு இருக்கே, ஆகா..கா..., என் நன்பன் இது போல் சிரிப்பவர்களை கண்டால் சொல்வான், தேவிடியா சிரிப்பு சிரிக்கிறான் பார்.... இவன் ஒன்னாம் நம்பர் மொள்ள மாறி.
விளம்பரம்.
இந்தியாவில் விளம்பரங்களுக்கு எந்த கட்டுப்பாடுமே இல்லை போல இருக்கு. விளம்பர ஏஜென்சிகள் மலிந்து போச்சு. தப்பை கூட சரின்னு விளம்பரம் பண்ண முடியுது. சட்டையில கறை இருந்தா தூக்கி மனைவி மூஞ்சில எறிஞ்சுட்டு போற, சிடுமூஞ்சி கணவர்களை கூட, சரி சரி கறையிருந்தா நல்லதுதான்னு நினைக்க வச்சிட்டானுங்க. நாங்க இந்தியா முழுசும் சர்வே எடுத்தோம், இல்லன்னா ரோடு ரோடா அழுக்கு துணிய பொரட்டி எடுத்தோம்னு அள்ளிவுடுரானுங்க. உங்க ரிசர்ச்சுக்கெல்லாம் என்னாடா எவிடென்சுன்னு எந்த கவர்மெண்ட் புண்ணியவானுங்களும் கேக்கல. புதுசா டெட்டால் சோப் விளம்பரம் பாத்தேன். கையில சேர்கிற கிருமிகளால குழந்தைகள் மனவளர்ச்சி பாதிக்கப்படுதுன்றானுங்க. அதுனால எப்படியாச்சும் அந்த சோப்பை வாங்க சொல்றானுங்க. இதுவரை ஒரு பொருளை வாங்குனா இது இலவசம் அது இலவசம்னு கவர்ச்சி காட்டுனானுங்க. இப்ப இதை வாங்கலன்னா இந்த வியாதி வரும் அந்த வியாதி வரும்னு பயம் காட்டுறானுங்க. பொருளல வாங்கலன்னாலும் பரவாயில்ல காசை மட்டும் எங்கிட்ட குடுத்துருன்னு கழுத்துல கத்தி வக்கிறதுக்குள்ளயாச்சும் இவனுங்களுக்கு ஆப்பு வையுங்க கவர்மெண்டு அப்ரண்டிசுங்களா.
காவிரி.
காவிரி பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிச்சிடுச்சு, இரு மாநிலங்களும் இடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனா அது வருசத்துக்கு ஒரு தடவ, டி20 மேட்ச் மாதிரி வழக்கமா நடக்குறதுதான். ஆன ஒரு அதிர்ச்சியான சம்பவம் என்னான்னா, இதுவரை வாய் மூடி மௌனகுருவா இருந்த மன்மோகன்சிங் ஒரு 9000 கன அடியாச்சும் தொறந்துவுடுங்கப்பான்னு திருவாய் மலர்ந்ததும், மீண்டும் எஸ் எம் கிருஷ்ணா வற்புறுத்தி கேட்டும் எல்லாம் பதினொன்னாம் தேதி நடக்குற மீட்டிங்குல பேசிக்கலாம்னு திருப்பி அனுப்பிச்சதும் தான். இவருக்குல்லயும் என்னமோ இருந்துருக்கு பாரேன்...
அன்புடன்
முத்துக் குமரன்.
நன்றி : பட உதவி - கூகுள்

nice
பதிலளிநீக்குநன்றி நண்பா.
நீக்குபல செய்திகளுக்கு நன்றி...
பதிலளிநீக்குஇங்கு மின்சாரம் ஆறு அல்லது எழு மணி நேரம் மட்டுமே...!
நன்றி திரு. தனபாலன்,
நீக்கு//இங்கு மின்சாரம் ஆறு அல்லது எழு மணி நேரம் மட்டுமே...!//
அந்த வகையில் நாங்க பெரிய புண்ணியம் பண்ணவங்க, இங்க ஒரு மணி நேரம் மட்டுமே.