புதன், 22 ஆகஸ்ட், 2012

உதவி தேவை...? !!!

நான் முகநூலில் ( face book ) மேய்ந்து கொண்டிருந்த பொழுது என் நன்பர் பகிர்ந்த ( share ) உதவி தேவை என்ற செய்தி படம் என் கண்ணில் பட்டது.


அதில் ஒரு மருத்துவமனையில் உள்ள குழந்தையின் படம் மற்றும் ஏன் என்ற காரணம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் இதனை பகிரும் பொழுது முகநூலில் உள்ள நிறுவனங்கள் அந்த குழந்தையின் மருத்துவ செலவுக்காக ஒரு குறிப்பிட்ட அளவு பணம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நானும் பல முறை இது போன்ற செய்திகளை பகிர்ந்திருக்கிறேன். காரணம் நம்மால் பண உதவி ஏதும் செய்ய முடியாவிட்டாலும், ஒரு கிளிக் -ல் அந்த குழந்தைக்கு கிடைக்க இருக்கும் உதவியை ஏன் நிராகரிக்க வேண்டும் என்ற எண்ணம்தான். முகநூலில் உள்ள பெரும்பாலானவர்கள் அதனால்தான் இது போன்ற விளம்பரங்களை தன் நன்பர்களுக்கு பகிர்கிறார்கள்.
 

ஆனால் சில காலமாக இது போன்ற செய்திகள் அதிகளவில் உலவ தொடங்கி விட்டன. எல்லா செய்திகளுமே குழந்தைகளை மையமாக வைத்தே புனையப்பட்டிருக்கின்றன அதனால் நாம் இச்செய்தியின் உண்மை தன்மையை சோதித்து அறிவதில்லை. இம்முறை இந்த செய்தியை சோதிக்காமல் பகிர நான் விரும்பவில்லை. எனவே வலையுலகில் நான் தேடிய போது இது ஒரு வகை மோசடி விளம்பரம் என்று தெரிந்தது.


வலையுலகில் பல்வேறு மோசடிகள் அரங்கேறி கொண்டு இருக்கின்றன. அவற்றில் பிரபலமானவை...

1. இமெயில் லாட்டரி.
    உங்கள் இமெயிலுக்கு மிகப்பெரிய பரிசு கிடைத்திருப்பதாகவும் அதை பெற்றுக்கொள்ள உங்கள் வங்கி கணக்கு தகவல் தரச் சொல்லியும், நம் கணக்கில் இருக்கும் மிச்ச மீதியையும் சுரண்டி விடுவது. இதை அதிகம் நடத்துவது நைஜீரியர்கள் என்பதால், இது நைஜீரியன் ஸ்கேம் என்று அழைக்கப்படுகிறது.

2. கடவுளின் அதிசயம்.
    இது நம் நாட்டு கண்டுபிடிப்பு, முன்பு போஸ்ட் கார்டுகளில் நம் வீட்டு முகவரிக்கு கடவுள்களின்( முக்கியமாக புட்டபர்த்தி சாய் பாபா மற்றும் ஏழுமலையான்) பெருமைகளைப் பற்றி பட்டியலிட்டு கடைசியாக இதை பத்து நபர்களுக்காவது அனுப்பாவிட்டால் குடும்பத்தில் பெரிய துயர சம்பவம் நேரும் என்று அன்புடன் எச்சரித்து வரும் கடிதம், கால மாற்றத்தால் முன்னேறி இன்று வலையுலகம் மற்றும் தொலைத் தொடர்பு துறைகளில் கால் பதித்திருக்கிறது.

3. உதவி தேவை.
    பரிதாபத்துக்குறிய யாராவது ஒரு குழந்தையின் பெயரில், ஏதேனும் ஒரு அமைப்புக்கு பணம் அனுப்ப சொல்லியே அல்லது மற்றவர்களுக்கு பகிரச் சொல்லியோ வரும் செய்திகள்.

இது போன்ற பல மோசடிகளால் நாள்தோறும் பலர் ஏமாந்து கொண்டே இருக்கிறோம். மேற்கண்ட உதவி தேவை என்ற மோசடியில், எல்லோரும் குழந்தைகளாக இருப்பதால் நாம் உடனடியாக பகிர்கிறோம். நம் இரக்க குணம் ஏமாற்றுபவர்களுக்கு லாபமாகிறது. அதே சமயம் நாம் ஷேர் செய்வதால் அவர்களுக்கு எப்படி லாபம் என்று யோசிக்கலாம். சிலர் இதை ஒரு பொழுது போக்காகவும், அவர்கள் செய்திகள் பல முறை பகிர அல்லது விரும்பப்பட்டிருக்கிறது என்ற வேடிக்கைக்காகவும், அல்பத்தனமான பெருமைகளுக்காகவுமே இதை செய்கிறார்கள். இது அவர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய லாபம். இன்னும் சிலர் ஏதாவது ஒரு அறக்கட்டளை துவங்கி எளிதாக பணம் சேர்க்க இந்த வழியை பின்பற்றுகிறார்கள்.

எனவே, இது போன்ற செய்திகளை இனி ஷேர் செய்து நீங்களும் ஏமாந்து, மற்றவர்களும் ஏமாற காரணமாகாதீர்கள். ஒருவேளை நீங்கள் பண உதவி செய்ய விரும்பினால், அச்செய்தியின் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொண்டு உதவுங்கள். அதே சமயம் அச்செய்தி பொய் என்று உறுதியானால் அந்த படத்தின் option பட்டனை அழுத்தி report this photo என்ற எழுத்தை கிளிக் செய்து முகநூலுக்கு தெரியப்படுத்துங்கள். இதனால் மற்றவர்கள் ஏமாறுவது தடுக்கப்படும்.



மேலும் இது போன்ற மோசடிகளை பற்றி தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட இணைப்புகளை படியுங்கள்.
http://www.fbi.gov/scams-safety/fraud/fraud#telmkt
http://thatsnonsense.com/blog/?p=168


அன்புடன்
முத்துக் குமரன்.
நன்றி : பட உதவி - facebook

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்