வியாழன், 16 ஆகஸ்ட், 2012

புலம்பல்கள் - 16/08/2012

அவலம்

டெல்லியில், பள்ளி பேருந்து ஜன்னலில் எட்டிப்பார்த்ததால், தந்தி கம்பத்தில் தலை மோதி மாணவன் உயிரிழந்தான். இனி பள்ளி பேருந்து ஜன்னல்களுக்கு வலை அமைக்க அரசு உத்தரவிடலாம். அதுவும் சில நாட்களுக்கு கடைபிடிக்கப்படலாம். பின்பு அடுத்த விபத்து நேரும்வரை எவரும் அதை பற்றி கவலைப்படப் போவதில்லை. அரசு உத்தரவிடுவதோடு சரி மீண்டும் நடக்காமல் இருக்க எந்த உத்தரவாதமும் இல்லை, அது எந்த மாநிலமாக இருந்தாலும். அதிகாரிகளுக்கும் எவ்வித அக்கரையும் இல்லை ஏனென்றால் அவர்களை யாரும் தண்டித்ததாக வரலாறு புவியியல் இல்லை. நமக்கும் எதிர்த்துக் கேட்கும் துணிவு இல்லை.


சில நாட்களுக்கு முன் நடந்த விபத்தில் கூட பள்ளி பேருந்தில் ஓட்டை இருந்தது, அப்பேருந்தில் செல்லும் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் பள்ளியில் அதை தெரிவித்ததோடு அவர்கள் கடமை முடிந்துவிட்டதாக கருதியதால்தான் ஒரு உயிரை இழக்க நேரிட்டது. சில நாட்களுக்கு அரசு இயந்திரங்கள் பேருந்துகளை நோக்கி வேகமாக செயல்படும் பின்பு பழைய குருடி கதைதான். பள்ளி பேருந்து மட்டும்தான் பிரச்சினையா !...

இன்று சென்னை அண்ணா நகரில் உள்ள பூங்காவிற்க்கு செல்ல நேரிட்டது. நல்ல பெரிய பூங்கா, நாள்தோரும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் வந்து செல்லும் இடம். சருக்கு மரம், ராட்டிணம், ஊஞ்சல் என களையாகத்தான் இருந்தது. ஆனால் அருகில் சென்று பார்த்த பொழுதுதான் அந்த சருக்கு மர உச்சியில் இருந்து ஓட்டை தெரிந்தது. ஆனாலும் சிறுவர்கள் ஓட்டையை தவிர்த்து சாமர்த்தியமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். இது இன்று சாதாரணமான நிகழ்வாக இருக்கலாம், நாளை? விழித்துக் கொள்வார்களா மக்கள்? அப்படியே தரையில் சுற்றும் ராட்டிணம் உங்களுக்காக.




********************************************************************************   
     
எச்சரிக்கை

திருவேற்காட்டில், குடிபோதையில் தகராறு செய்த கணவனை எரித்துக் கொன்றார் மனைவி. இதை படித்த நன்பர் கேட்டார், சே... வாய் தகராறுக்காக ஒரு பெண்ணால் கொலையும் செய்ய முடியுமா?

நல்ல கேள்வி ஆனால், இதற்கான பதிலை அந்த கொடுமையை அனுபவித்தவரால் மட்டுமே உணரமுடியும். குடிபோதையில் நடுத்தெருவில் நின்று கெட்ட கெட்ட வார்த்தைகளால் கூவிக் கொண்டிருக்கும் ஒரு குடிகாரனின் பிள்ளைகளால் மீண்டும் அந்த தெருவில் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா?

அவன் மனைவியால் மீண்டும் அக்கம் பக்கத்து வீடுகளில் அவமானத்தை மறந்து இயல்பாக பழக முடியுமா?

எங்கோ குடித்து வீழ்ந்து கிடப்பவனை, நன்பர்களின் உதவியுடன் அள்ளிக் கொண்டுவரும் மகனால் மீண்டும் நன்பர்களுடன் சுமுகமாக உறவாட முடியுமா?

இப்படி பல நாட்கள் பல முடியுமாக்கலுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மனைவியால் கொலை செய்ய முடியுமா? - முடியும் என் செயலில் காட்டியிருக்கிறார் திருவேற்காடு பிருந்தா.

 இதுவரை, குடிகார கணவனின் தொல்லை தாங்க முடியாத மனைவி, பிள்ளைகளுடன் தற்கொலை, என்று மட்டுமே செய்தி வாசித்த நமக்கு சக்திவேல் கொத்தனாரின் கொலை ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் சக்திவேல் போன்ற குடிகாரர்களுக்கு இது ஒரு எச்ச்ரிக்கையாக இருக்கும்.


********************************************************************************  


கொடுமை

நேற்று முதல் எங்கள் வீட்டு கேபிள் டிவியில் புதிய தலைமுறை சேனல் தெரியவில்லை. ஒருவேளை வேறு அலைவரிசையில் வருமோ என்று மீண்டும் மீண்டும் ட்யூன் செய்தும் கிடைக்கவில்லை.கேபிள் ஆப்பரேட்டரிடம் புகார் சொன்னதற்க்கு, சார்! சுமங்கலி கேபிள் விஷனிலேயே அதை தூக்கிட்டாங்க சார் என்றார்.

தமிழில் இருந்த செய்திச் சேனலிலேயே நல்ல நிகழ்ச்சிகள் இருந்தது புதிய தலைமுறையிடம் மட்டுமே என்பது என் எண்ணம். அது பொறுக்கவில்லை காலாவதிக்கு. சாரி!!! கலாநிதிக்கு. ஏற்கனவே நெ.1 இடம் பறி போனபோதே இதை எதிர்பார்த்தேன். ஆனால் தற்போது நிகழ்ந்துள்ளது. கலாநிதியின்
அலுகுனி ஆட்டம் ஆரம்பித்துவிட்டது. இனி சன் நியூஸ்தான் நம்பர் 1 என்று மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால் நாம் பணம் கொடுத்து, எதை பார்க்க வேண்டும் என்பதை எவனோ முடிவு செய்வது கொடுமையிலும் கொடுமை.


அன்புடன்
முத்துக் குமரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இது தொடர்பான உங்கள் கருத்துகளை பின்னூட்ட பெட்டிகளில் இடவும்